ஏ - வரிசை 3 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏவன்

யாவன்

ஒரு விளிக்குறிப்பு. ஏயெம்பெருமான் (தேவா. 746, 7).
ஓர் இகழ்ச்சிக்குறிப்பு.
பெருக்கம், ஏபெற்றாகும் (தொல். சொல். 305).
அடுக்கு. (தொல். சொல். 305, உரை.)
மேனோக்குகை. கார்நினைந் தேத்தரு மயிற்குழாம் (சீவக. 87).
இறுமாப்பு. ஏக்கழுத்த நாணால் (பரிபா. 7, 55).
உழையிசையின் அக்கரம். (திவா.)

உயர்வு
பெருமை
அம்பு

ஏடா

தோழன் தாழ்ந்தோன் இவர்களை விளித்தற்கண் வரும் இடைச்சொல். (மணி. 14, 12).

ஏடி

தோழி முதலிய பெண்பாலாரை விளித்தற்கண்வரும் இடைச்சொல்.

ஏயே

பரிகாசக் குறிப்பு. (திவா.)

ஏலேலம்

See ஏலேலோ.

ஏலேலோ

படகுமுதலியன தள்ளுவோர்பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒருசொல்.

ஏனை

மற்றை. (சூடா.)

ஏகப்பட்ட

மிகுதியான

ஏனென்றால்

நான்அப்படிச்சொல்லுவது ஏனென்றால்.

ஏரிண்வாணர்

See ஏரின்வாழ்நர். (திவா.)

ஏற்ப

ஓர் உவமவுருபு. (தண்டி. 33)
தக்கபடி.

ஏககாயனி

ஒரு வருடத்துக் கடாரி.

ஏககுரு

உடன்கற்றோன்.

ஏகசர்க்கிரவர்த்தி

சுயாதிபதி, கடவுள்.

ஏகசக்கிராதிபதி

ஏகசக்கிரவர்த்தி.

ஏகசமன்

ஒருசரி
ஒரு நிகர்

ஏகசாம்

காண்டாமிருகம்.

ஏகசாதர்

சகோதரர்.