ஏ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏகோத்தரவிருத்தி

இறந்தவர்க்கு முதற்பத்துநாட்செய்யும் ஒரு சிராத்தம்

ஏகோத்திஷ்டம்

இறந்தவர்க்குப் பதினொராநாளிற் செய்யும் ஒரு சிராத்தம்

ஏகோதிட்டம்

ஏகோத்திஷ்டம்

ஏங்கல்

ஆரவாரிக்கை. ஈட்டிய சமபல வீர ரேங்கலால் (இரகு. திக்குவி. 251)
மயிற்குரல். (பிங்.)
யாழ்நரம்பினோசை. (பிங்.)
அழுகை. (பிங்.)
குழந்தைகட்கு வருங் காசநோய்

ஏழ்கடல்

பாற் கடல்
தயிர்க் கடல்
நெய்க் கடல்
கருப்பஞ் சாற்றுக் கடல்
தேன் கடல்
நன்னீர்க் கடல்
உப்புக் கடல்

ஏத்தல்

போற்றித்துதித்தல்

ஏவது

ஏவியது

ஏச்சு

வசவு
திட்டு