ஏ - வரிசை 15 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏடுகோ

ஏடுகோத்தல்
பனையோலைகளினாலமைத்த புத்தக விதழ்களைக் கயிற்றிற் கோத்தல்.

ஏடுசேர்

ஏடுசேர்த்தல்
பனையோலைகளை ஏடுகளாகச்சீவிப் புத்தகமாக்குதல்

ஏடுதூக்கு

ஏடுதூக்குதல்
ஆசிரியரிடம் ஏட்டை எடுத்துப் படித்தல்

ஏடுபடு

ஏடுபடுதல்
பாலில் ஆடையுண்டாதல்
பாசிபடிதல்

ஏடுவாரு

ஏடுவாருதல்
புத்தகவேடுகளாக உதவுமாறு பனையோலைகளைச் சீவுதல்

ஏடெழுது

அக்ஷராப்பியாசஞ்செய்ய முதலில் ஏடு எழுதித்தருதல்
புதுப்புத்தகமெழுதத் தொடங்குதல்

ஏத்து

துதித்தல். (திவா.)
வாழ்த்துதல். பகைதவ நூறு வாயென... ஏத்தினாள் (சீவக. 324)

ஏதலிடு

பொறாமையாய்ப் பேசுதல். (W.)

ஏதுகரப்படு

அனுகூலமாதல். (W.)

ஏதுப்பண்ணு

நாடியபொருள் கிடைத்தற்கு வகைசெய்தல்

ஏதுப்பார்

சமயம் பார்த்தல். (W.)

ஏந்திக்கொள்

கையாற்றூக்குதல்
கையாற்றாங்குதல்
கைகொடுத்தல்

ஏககண்டமாய்

ஒரே குரலாய். ஏககண்டமாய் அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள். (Mod.)

ஏல

முன்னமே. பிரளயம் வருமென் றேலக் கோலி (ஈடு, 2, 8, 7)
மிக. கல்வியேலயமைந்த பெருமை பெற்றும் (திருக்காளத். பு. 3, 8)

ஏவஞ்ச

ஆகக்கூடி. ஏவஞ்ச இந்தக்காரியம், முடியலாம். (Brah.)

ஏவம்

இவ்விதம். (Brah.)

ஏற்கவே

முன்னமே. ஆபத்துவந்தபோது நம்மைத் தேடித்திரியவொண்ணா தென்று ஏற்கவே கடலிடங் கொண்டவனை (ஈடு, 3, 6, 2)

ஏற்புழி

ஏற்குமிடத்து. அடைகளை ஏற்புழி யெங்கும் ஒட்டுக (சிலப். 13, 155, உரை.)

ஏற்றவாறு

ஏற்றபடி

ஏற்றாற்போல

ஏற்றபடி