ஏ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏகாதசர்

ஏகாதசருத்திரர். எண்வசுக்க ளேகாதசர்கள் (தேவா. 1040, 5).
பதினோராமிடத்துள்ள கிரகம். ஏகாதசர் நால்வ ருச்சரே (கம்பரா. திருவவ. 110).

ஏகாதசருத்திரர்

மாதேவன்
சிவன்
உருத்திரன்
சங்கரன்
நீலலோகிதன்
ஈசானன்
விசயன்
வீமதேவன்
பவோற்பவன்
கபாலி
சௌமியன் (திவா.) அரன் for சிவன். (பிங்.)

ஏகாதசி

பதினோராந்திதி.

ஏய்ப்ப

ஓர் உவமவுருபு. (தொல். பொ. 290.)

ஏய

ஓர் உவமவுருபு. (தண்டி. 33.)

ஏர்ப்ப

ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286
உரை.)

ஏர

ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286
உரை.)

ஏனம்

Enumerative particle added to ஃ, as in அஃகேனம்
ஆய்த வெழுத்தின் சாரியை. (தொல். எழுத். 134, உரை.)

ஏனும்

என்றாலும். தாமரை முதலிவற்கேனும் (கந்தபு. காமதகன. 83).

ஏக்கம்பிடி

துக்கமிகுதல்
மகன்செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது

ஏக்கறு

இளைத்து இடைதல். கடைக்க ணேக்கற (சீவக. 1622)
ஆசையால் தாழ்தல். ஏக்கற்றுங் கற்றார் (குறள், 395)
விரும்புதல். மதியேக்கறூஉ மாசறு திருமுகத்து (சிறுபாண். 157).

ஏக்கெறி

கவலை யொழிதல்
அச்சமுறுதல். ஏக்கெறிந் துலகெங்கு மிரைத்திட (இரகு. ஆற்று. 3)

ஏகமாயிரு

ஒன்றாயிருத்தல். நானேகமாய் நின்னோடிருக்குநாளெந்தநாள் (தாயு. எங்கு நிறை. 6)
மிகுதியா யிருத்தல். (Colloq.)

ஏகு

போதல். தாய்த் தாய்க்கொண் டேகுமளித்திவ் வுலகு (நாலடி, 15)
நடத்தல். (பிங்.)
கழலுதல். நல்வளையேக (பு. வெ. 11, பெண்பாற். 12)

ஏகோபி

ஒன்றுபடுதல். ஏகோபித்து முளைத்துக்கொண்டார் (இராமநா. உயுத்த. 88.)

ஏங்கிப்போ

ஏக்கம்பிடித்தல். தாயைப் பிரிந்ததனால் குழந்தை ஏங்கிப்போயிற்று

ஏங்கு

ஒலித்தல். குன்றினின் றேங்கு மருவி (திருக்கோ. 148)
இளைத்தல். தாழ்ந்து தளர்ந்தேங்கி (சீவக. 2012)
மனம்வாடுதல். மக்கட்கென் றேங்கி (நாலடி, 130)
அழுதல். (சூடா.)
அஞ்சுதல். நேரலன் படையை நோக்கியேங்கினர் (கந்தபு. சூரபன்மன்வதை. 50)

ஏச்சுக்காட்டு

பழிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசுதல்

ஏசறு

வருத்தமுறுதல். (அகநா. 32.)
ஆசைப்படுதல். வரைத்தோள் கூடுதற் கேசற்ற கொம்பினை (பதினொ. ஆளு. திருவந். 45)
பழித்தல். ஏசறு மூரவர்கவ்வை (திவ். திருவாய். 5, 3, 1.)

ஏசு

இகழ்தல். ஏசவெண்டலையிற்பலிகொள்வதிலாமையே (தேவா. 425
6)