ஏ - வரிசை 13 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏகவடம்

ஏகாவலி. பொங்கிளநாகமொ ரேகவடத்தோடு (தேவா. 350, 7).

ஏகவல்லி

ஏகாவலி. (பெருங். உஞ்சைக். 46, 211.)

ஏகவாசம்

தனிமையாயிருக்கை
கூடியிருக்கை

ஏகவாணை

பொதுவற ஆளுகை. ஏகவாணை வெண்குடை (சீவக. 141.)

ஏகவாரம்

ஒருபோது. இன்று ஏகவாரந்தான் உணவு.

ஏகவிடுகொடி

ஏகாவலி. ஏகவிடுகொடி யெழிற்றோ ளெழுதி (பெருங். உஞ்சைக். 34, 201).

ஏகவீரன்

தனிவீரன். (திவ். திருவிருத். 13, வ்யா.)

ஏகவீரியன்

வீரபத்திரன். (பிங்.)

ஏகவெளி

பெருவெளி

ஏகவேணி

ஒற்றைச் சடையுடைய மூதேவி. (பிங்.)

ஏகாக்கிரசித்தம்

ஒன்றிலே ஊன்றிய மனம். ஏகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம் (சிவப். பிரபந். அபிஷே. 8).

ஏகாக்கிரதை

ஒன்றிலே மனம் பதிந்திருக்கை

ஏகாகம்

இறந்தவர்க்குப் பதினோராநாளிற்செய்யுங் கிரியை

ஏகாகி

தனித்திருப்போன்

ஏகாங்கநமஸ்காரம்

தலைவணங்கிச் செய்யும் நமஸ்காரம். (சங். அக.)

ஏகாசம்

உத்திரீயம். ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற்றோண்மே லேகாசமா விட்டு (தேவா. 257, 3).

ஏகாட்சரம்

நூற்றெட்டுபநிடங்களுள் ஒன்று.

ஏகாட்சரி

ஓரெழுத்தாலாய மந்திரம்.
Quatrain composed of the same consonant in combination with various vowels, as தித்தித்த தோதித்திதி
உயிரோடும் தனித்தும் ஒரே மெய்வரும் மிறைக்கவி. (W.)

ஏகாட்சி

ஒற்றைக்கண் +(ணன்,ணி)
காகம்.

ஏகாண்டம்

முழுக்கூறு. ஏகாண்டமான தூண்.