எ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எதிர்பால்சேர்க்கை

எதிர்பாலினத்தவரிக்கிடையே இடம்பெறும் ஈர்ப்பு அல்லது உடலுறவு எதிர்பால்சேர்க்கை. ஆதாவது ஆணுக்கு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் சேர்க்கை

எட்டமன்

எட்டயபுரத்து அரசர்களின் பட்டப்பெயர்

எக்கச்சக்கமாக

தப்பிக்க முடியாதபடி.

எக்களிக்க

மகிழ்ச்சி மிக.

எடுத்த எடுப்பில்

ஆரம்பத்தில்.

எடுத்ததெற்கெல்லாம்

தேவையற்ற போது.

எடுத்தெறிந்து

அலட்சியமாக.

எடுப்பார்கைப்பிள்ளை

எளிதாகப் பிறரால் வசப்படுத்தக்கூடியவர்.

எதிரும் புதிருமாக

நேருக்கு நேராக.

எதிர் நீச்சல்

தடை முதலானவற்றை எதிர்த்துப் போராடுதல்.

எதேச்சையாக

தற்செயலாக : எதிர்பாராமல்.

எமகண்டன்

திறமைசாலி.

எமகாதகன்

எந்தச் செயலையும் முடிக்கும் ஆற்றல் உள்ளவன்.

எம்பிக்குதி

மேலே உந்தி எழும்பு.

எரிந்து விழு

சினந்து பேசு
கடுமையாகப்பேசு

எள்ளுதான்

கொடுத்த பணம் திரும்பி வராது.

என்னவோ

ஒருவர் சொல்வதை முழுமையாக ஏற்காது ஐயம் காட்டுதல்.

எழுநகரம்

புவி தன்னின் மேலவாய்வீடருள்கின்ற வெழுநகரத்துள் (கந்தபு. திருநகரப். 75).

எற்று

எத்தனமைத்து. எற்றென்னை யுற்ற துயர் (குறள்
1256). அதிசய விரக்கக்குறிப்பு.

எறி

வீச்சு. ஓர் எறியில் விழச்செய்தான்
உதை
அடிக்கை. சூறை மாருதத் தெறியது வளியின் (திருவாச. 3, 11)
குறிப்பாகச்சொல்லுகை. ஓர் எறி எறிந்து அதற்கு வைக்கவேண்டும்