எ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எல்லோன்

சூரியன்.

எவையும்

யாவையும்.

எழிற்கை

அழகுபெறக் காட்டுங்கை.

எழுச்சிக்கொடி

கண்ணினிற் படரும்ஒருநோய்.

எழுத்தாவெழுத்து

அச்செழுத்து.

எழுதுதல்

எழுதல்.

எழுதுபடம்

கிழி.

எழுதுவரிக்கோல்

பத்திக்கற்று.

எழுத்தாணிப்பூடு

கூத்தன் குதம்பைஎனும் பூடு.

எழுத்துகாரியஸ்தன்

எழுத்துக்காரன்.

எழுத்துக்கிறுக்கு

உடன்படிக்கையெழுதுகை.

எழுத்துச்சந்தி

எழுத்துகளின் புணர்ச்சி.

எழுத்துச்சாரியை

ஓரெழுத்தான் வருஞ்சாரியை.

எழுத்துநடை

எழுத்துவாசனை.

எழுத்துப்புடவை

சித்திரவஸ்திரம்.

எழுத்துவாசனை

எழுத்துநடை.

எழுநாமித்திரன்

வாயு.

எழுந்தமானம்

யோசனை பண்ணாமை.

எழுந்தருளிவிக்கிரகம்

வெளிகொண்டுவருகிற விக்கிரகம்.

எழுந்தருளுநாயகர்

உச்சவ விக்கிரகம்
உற்சவமூர்த்தி