ஊ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஊன்றி

ஒருபாம்பு.

ஊதாரி

வீண் செலவு செய்பவன்.

ஊகாரம்

ஓரெழுத்து.

ஊங்கென

மிகவும்.

ஊசரத்திராவணம்

வெடியுப்பு.

ஊசாடுதல்

ஊடாடுதல்.

ஊசிக்காரர்

ஒருவகைநெல்.

ஊசிக்கால்

மச்சுக்கால்.

ஊசித்துளை

பாசம்.

ஊசித்தொண்டை

சிறுமிடறு.

ஊசிப்பாலை

ஒருபாலை.

ஊசிப்புல்

ஒருபுல்.

ஊசிமல்லிகை

ஒருமல்லிகை.

ஊசிமிடறு

சிறுத்தொண்டை.

ஊசிமுல்லை

ஒருவகைமுல்லை.

ஊசிமுனை

ஊசிநுனி.

ஊசிமுடித்தலைவாரை

ஒருதலைப் பெட்டி.

ஊஷரக்கல்

சுக்கான்கல்.

ஊஷரத்திராவணம்

வெடியுப்பு.

ஊஷவானு

உழமண்
பூமி.