உ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உவர்

உப்பச் சுவை
உப்பு
உவர் மண்
கடல்
இனிமை

உவர்ப்பு

உப்புச் சுவை
துவர்ப்பு
வெறுப்பு

உவரி

உப்பு நீர்
கடல்
சிறுநீர்

உவவு

உவப்பு
முழு நிலா
அமாவாசை

உவனகம்

அந்தப்புரம்
சிறை
மதில்சுவர்
அகழி
வாயில்
இடைச்சேரி
பள்ளம்
குளம்
ஏரி
பரந்த வெளியிடம்
உப்பளம்
பிரிதல்

உவா

பெளர்ணிமை
அமாவாசை
கடல்

உவாமதி

முழுநிலா

உழக்கு

கலக்கு
மிதித்து நசுக்கு
பேரளவில் கொன்றழி
உழு
விளையாடு [உழக்குதல்]
இரண்டு ஆழாக்களவு
சூதாடு காய்களைப் போட்டு உருட்டும் பெட்டி

உழப்பு

வருத்தம்
துன்பம்
முயற்சி
பழக்கம்

உழல்

அசைதல் செய்
சுழலு
அலைதல் செய் [உழலுதல், உழற்சி]

உழலை

செக்கு அல்லது கரும்பாலையில் சுழலும் மரம்
குறுக்கு மரம்
மாட்டின் கழுத்துக் கட்டை

உழவன்

நிலத்தை உழுபவன்
மருத நில வாசிகளில் ஒருவன்
ஏர் மாடு
விவசாயி

உழவாரம்

புற்செதுக்கும் கருவி

உழவு

உழுதல்
பயிர்த் தொழில்
உடலுழைப்பு

உழவுசால்

உழுத நிலத்தில் ஏற்படும் வரி

உழி

இடம்
பொழுது
ஏழாம் வேற்றுமை உருபு

உழு

உழுதல் செய்
கிளைத்தல் செய்
தோண்டுதல் செய் [உழுதல்]

உழுவலன்பு

ஏழு பிறப்புகளிலும் மாறாது தொடரும் சிறந்த அன்பு

உழுவை

புலி
ஒருவகை மீன்

உழை

வருந்தி முயற்சி செய்
வருந்து
வருமானம் பெற வேலை செய்
கலைமான்
ஆண்மான்
அண்மை, பக்கம், இடம், உவர்மண், ஏழிசைகளுள் ஒன்று, கதிரவன் மனைவியர்களில்
ஒருத்தி, யாழின் நரம்பு, விடியற்காலம்
[உழைத்தல், உழைப்பு]
உழையர், உழையவர் - அருகிலுள்ளவர்
அமைச்சர்
வலர்