உ - வரிசை 74 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உலமரம்

துன்பம்
அச்சம்
வானம்

உலவு

உலாவு
சுற்று

உலறு

நீர் வற்று
வாடிபோ
சிதைவுறு
சினங்கொள் [உலறுதல்]

உலா

பவனி வருதல்
பவனி வருதல் பற்றிய ஒரு பிரபந்தம்

உலாத்து

உலாவு
உலாவச் செய் [உலாத்துதல்]

உலாவு

அங்குமிங்கு அசை
பவனி வா
பரவு
சூழ்ந்திரு [உலாவுதல்]

உலுக்கு

குலுக்குதல் செய்
நடுங்கு [உலுக்குதல்]

உலுத்தன்

உலோபி

உலுப்பு

அசைத்து உதிரச் செய் [உலுப்புதல்]

உலை

அடுப்பு
கொல்லருலை
சமையலுக்குக் கொதிக்க வைக்கும் நீர்ப்பாண்டம் மனக்குழப்பம்

உலைவு

நடுக்கம்
தோல்வி
அழிவு
தொந்தரை
வறுமை
ஊக்கமின்மை

உலோகம்

பேராசை
பற்றுதல் மிக்க மனம்
குறைபாடு
(இலக்கணம்) புணர்ச்சியில் கெடுதல் விகாரம்

உவச்சன்

கோயில் பூசாரி சாதியான்
பண்டைய அராபிய இனத்தைச் சார்ந்தவன் (சோனகன்)

உவட்டு

தெவிட்டு
வெறுப்புறு
மிகுதியாகு [உவட்டுதல், உவட்டிப்பு]

உவப்பு

மகிழ்ச்சி
விருப்பு
உயரம்

உவமம்

உவமை

உவமானம்

உபமானம்

உவமித்தல்

ஒப்பிடுதல்

உவமை

ஒப்பு
ஒற்றுமை
உவமையணி

உவமைத் தொகை

உவகையுருபு தொக்க தொலை (எ.கா - பவளவாய்)