ஈ - வரிசை 9 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈர்வெட்டு

ஈர்பட்டு.

ஈழமண்டலம்

இலங்கை.

ஈழைக்கொல்லி

தாளகம்.

ஈளைக்காரன்

கோழைநோயாளி.

ஈறுகட்டி

இரசகருப்பூரம்.

ஈறுகெடுதல்

ஈரழிதல்.

ஈற்றசையோகாரம்

ஈற்றசையாகவரும்ஏகார விடைச்சொல்.

ஈனசாதி

எளியசாதி.

ஈனத்தார்

கொன்றை.

ஈனுமணிமை

சீதகம், புனிறு.

ஈமம்

இ(சு)டுகாடு
சுடுகாடு
பிணம் சுடும் விறகுக் குவியல்
பாதிரிமரம்

ஈமைக்கிரிகை

இறுதிச்சடங்கு

ஈழை

ஈளை

ஈங்கண்

இவ்விடம்

ஈசானம்

சிவபிரானின் ஐந்து முகங்களில் ஒன்று
வடகீழ்த்திசை

ஈசாவியம்

வடகீழ்த் திசை

ஈட்டம்

பொருள் சம்பாதித்தல்
கூட்டம்
சேமிப்பு
மிகுதி
வலிமை

ஈண்டு

இவ்விடத்தில்
இப்பொழுது
இம்மையில்
விரைவு
கூட்டமாகச் சேர்ந்திரு
எண்ணிக்கை மிகுந்திரு
விரைந்து செல்
தோண்டியெடு [ஈண்டுதல்]

ஈந்தி

ஈச்சமரம்
சிற்றீச்சமரம்
நஞ்சு

ஈமத்தாழி

பண்டைக் காலத்தில் இறந்தோரை வைத்துப் புதைக்கும் ஒருவகைப் பாண்டம்
முதுமக்கள் தாழி