ஈ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈசானியன்

ஈசானன்.

ஈசிதன்

ஆள்பவன்
செங்கோல் செலுத்துபவன்
ஈசுவரன்

ஈசுரவிந்து

பாதரசம்.

ஈசுரவேர்

தராசுக்கொடி.

ஈசுவரதரு

கடம்பு.

ஈச்சப்பி

உலோபி
கஞ்சன்

ஈச்சு

ஈச்சமரம்.

ஈச்சுக்கொட்டல்

கீழ்க்கைவிடுதல்.

ஈச்சுவரன்

கடவுள்
தலைவன்.

ஈச்சோப்பி

ஈப்பிணி
ஈயோட்டி

ஈடழிவு

சீர்கேடு.

ஈடை

ஈகை
புகழ்ச்சி

ஈட்டுக்கீடு

சரிக்குச்சரி

ஈணை

அகணி
தெங்கு பனை இவற்றின் நார்

ஈண்டுதல்

ஈண்டல்
கூடுதல்
செறிதல்
விரைதல்
அடர்ந்து வளர்த்தல்
திரளுதல்
தொகுதல்
வருதல்
நிறைதல்
பெருகுதல்
தோண்டுதல்.

ஈண்டையான்

இவ்விடத்தவன்.

ஈத்வரீ

வியபசாரி.

ஈப்சை

இச்சை.

ஈப்பிணி

உலோபி.

ஈப்புலி

ஈயைக்கொல்லும் பூச்சி.