ஈ - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈவிரக்கம்

(அடிப்படை மனிதத் தன்மைகளான) இரக்கம்
பரிவு முதலியன

ஈவு

ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின் மடங்கு
கொடை
பங்கிடுதல்
ஒழிதல்

ஈவுத்தொகை

ஒரு நிறுவனம் லாபத்தில் தன் பங்குதாரர்களுக்குத் தரும் விகிதம்

ஈளை

ஆஸ்துமா
கோழை
காசநோய்
இழைப்பு நோய்

ஈற்றயல்

(சொல்லைப் பிரித்து அல்லது செய்யுள் உறுப்புகளைப் பிரித்துக் கூறும்போது) இறுதிக்கு முந்திய

ஈற்று

(விலங்கு கன்று ஈனுவதை அல்லது குட்டிபோடுவதைப் பற்றிக் கூறும்போது) தடவை

ஈறாக

(பலரை அல்லது பலவற்றைக் குறிப்பிடும்போது)'வரை' என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்

ஈறு

வாயில் பற்கள் ஊன்றியிருக்கும் தசை
(ஒரு நிகழ்ச்சி,வரிசை முதலியவற்றில்)இறுதி,கடைசி
முடிவு
எல்லை
மரணம்

ஈன்

(பெண்ணைக் குறித்து வரும் போது)குழந்தையைப் பெறுதல், (விலங்குகளைக் குறித்து வரும்போது)கன்று போடுதல்,குட்டி போடுதல்
விளைவி [ஈனுதல், ஈனல்]

ஈன்றெடு

ஈனுதல்
ஈன்

ஈனம்

இழிவு,கேவலம்
குறை
(குரலைக் குறிப்பிடும்போது)மெலிதாக ஒலிப்பது,சக்தியின்மை

ஈனுலை

அணுசக்தியை உற்பத்தி செய்யப் பயன்படும் தொழில்நுட்பச் சாதனம்

ஈகம்

இச்சை
சந்தனமரம்.

ஈங்கு

ஈண்டங்கொடி
இவ்விடம்
சந்தனம்.

ஈங்கை

இண்டங்கொடி.

ஈசதேசாத்தி

பெருமருந்து.

ஈசுரன்

ஈசன்
ஈச்சுவரன்
கடவுள்
சிவன்

ஈஞ்சு

ஈச்சமரம்.
ஈந்து

ஈஞ்சை

இகழ்ச்சி, கொலை, நிந்தை.

ஈடணம்

புகழ்.