ஈ - வரிசை 3 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈயாப்பிசினி

கஞ்சன்,கருமி

ஈர்

பேனின் முட்டை
(உயிரெழுத்துகளில் தொடங்கும் பெயர்ச்சொற்களுக்கு முன் வரும்போது)இரண்டு என்பதன் பெயரடை வடிவம்
ஈர்க்கு
இறகு
நுண்மை
ஈரம்
பசுமை
இனிமை
நெருப்பு

ஈர்க்கு

பனை;தென்னை ஓலையின் நடுவில் உள்ள மெல்லிய (கம்பி போன்ற) நரம்பு

ஈர்க்குச்சி

ஈர்க்கு

ஈர்ப்பு

(ஒருவரைத் தன்பக்கம்)இழுக்கும் தன்மை அல்லது ஆற்றல்,கவர்ச்சி
(பொருள்களைத் தன்நோக்கி வரச் செய்யும்)இழுப்பு சக்தி,ஆகர்சணம்
(ஒருவர் ஈடுபட்டிருக்கிற செயல் அவரைப் பிற செயல்களில் கவனத்தைச் செலுத்த விடாமல்) கவர்கிற நிலை

ஈர்வடம்

பனை நாரால் பின்னப்பட்ட கயிறு

ஈர்வலி

(தலைமுடியிலுள்ள ஈர் ,பேன் ஆகியவற்றை எடுப்பதற்குப் பயன்படுத்தும்) நீண்ட பற்களும் கைபிடியும் கொண்ட ஒருவகை மரச் சீப்பு
ஈர் உருவுங் கருவி

ஈர்வாங்கி

ஈர்வலி

ஈரப்பசை

(பொருள் அல்லது இடம் கொண்டிருக்கும்)நீர்த்தன்மை
ஈரக்கசிவு
இரக்கம்

ஈரப்பதம்

ஈரத்தன்மை

ஈரப்பதம்

பயிர் நிலங்கள் முதலியவற்றில் காணப்படும் ஈரம்

ஈரப்பதன்

ஈரப்பதம்,ஈரத்தன்மை

ஈரம்

நீரில் நனைவதால் பொருள்களில் காணப்படும் நீர்த்தன்மை, நீர்த்துளி,ஈரப்பதம்
இரக்கம்,கருணை

ஈரல்

ஈருள்
[ கல்லீரல், மண்ணீரல்] வருந்துகை
சுருள்
வருத்துதல்
மார்பிலுள்ள ஊன்

ஈரலி

ஈரமாதல்

ஈரலிப்பு

ஈரப்பதம்,ஈரம்

ஈருருவி

ஈர்வலி

ஈருருவி

முடிவொன்றை எடுக்காமல் இரண்டு பக்கமும் மாறிமாறி சிந்தித்துக் கொண்டிருக்கும் நபர்

ஈருள்ளி

காரம் சற்றுக் கூடிய சிறு வெங்காயம்

ஈரெட்டாக

ஈரெட்டான,(பெரும்பாலும் பேச்சைக் குறித்து வரும் போது)(வேண்டுமென்றே)நிச்சயமற்றதாக/நிச்சயமற்றதான