ஈ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈனமாந்தர்

அற்பர்
கீழ்மக்கள்

ஈனவன்

இழிந்தோன்

ஈனக்குமரி

மகப் பெறாத இளம் பெண்

ஈனில்

கருவுயிர்க்கும் இடம்
பொறையுயிர்த்தற்குரிய இடம்

ஈனுதல்

பெறுதல்
உண்டாக்குதல்
விடுதல்
குலைவிடுதல்
தருதல்

ஈனும்

பெறும்

ஈனை எழுதுதல்

சித்திரக் குறிப்பு வரைதல்

ஈன்றணிமை

அண்மையில் ஈனப்பட்டமை
புனிறு

ஈன்றார்

தாய் தந்தையர்

ஈன்றான்

தந்தை
நான்முகன்

ஈகையாளன்

கொடையாளன்

ஈசத்துவம்

யாவர்க்கும் தேவனாதல்
செலுத்துகை
எண் வகைச் சித்திகளுள் ஒன்று

ஈசானன்

வடகிழக்குத் திக்குப் பாலகன்
சிவன்

ஈசுரமூலி

பெரு மருந்துக் கொடி
தராசுக் கொடி

ஈசுவர

ஒரு தமிழ் ஆண்டு

ஈச்சுரம்

சிவதத்துவம் ஐந்தனுள் ஒன்று

ஈடிகை

அம்பு
எழுதுகோல்
தூரிகை

ஈடுகொள்ளுதல்

மனம் கனிதல்

ஈட்டுத்தொகை

உதவித் தொகை

ஈண்டல்

நெருங்குதல்
கூடுதல்
நிறைதல்
விரைதல்