ஈ - வரிசை 12 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈட்டுதல்

கூட்டுதல்

ஈட்டுப்பத்திரம்

அடைமான சாசனம்

ஈணவள்

ஈன்றவள்

ஈண்டுநீர்

கடல்

ஈதி

மிகுந்த மழை
மழையின்மை
எலி
விட்டில்
கிளி
அரசின்மை என்னும் ஆறினாலும் நாட்டிற்கு வருங்கேடு

ஈதியாதை

தருமசங்கடம்

ஈதை

துன்பம்
வருத்தம்
துயர்

ஈத்த

கொடுத்த

ஈத்தந்து

கொடுத்து

ஈநம்

இழிவு

ஈப்பிலி

ஈயைக் கொல்லும் ஒரு வகைப் பூச்சி
நாய்ப்புலி விளையாட்டு

ஈமவனம்

சுடுகாடு

ஈமன்

சிவன்

ஈயவரி

பெருமருந்து

ஈயன்மூதாய்

இந்திரகோபம்

ஈயெச்சிற்கீரை

புதினாக்கீரை

ஈரசைச்சீர்

இரண்டசைச்சீர்
இயற்சீர்
ஆசிரியச்சீர்
ஆசிரிய உரிச்சீர்
அது தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் வாய்ப்பாட்டான் வருவது

ஈரடிப்பயன்

கவர்பொருள்
ஐயம்
மாறுபாடு

ஈரடுக்கொலி

இரட்டையாக அடுக்கி வரும் ஒலிக் குறிப்புச் சொல்

ஈரணம்

வெறுநிலம்
களர்நிலம்