ஈ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈசுவரவிந்து

பாதரசம்
இரசம்

ஈசுவரிவிந்து

ஈசுவரிபிந்து
ஈசுவரி நாதம்
கந்தகம்
கெந்தகம்
பாதரசம்

ஈசுவை

பொறாமை

ஈசை

ஏர்க்கால்
உமையவள்
கலப்பை

ஈடகம்

மனத்தைக் கவர்வது

ஈடணை

அவா
பேரவா

ஈடழிதல்

பெருமைகள் கெடுதல்

ஈடறவு

சீர்கேடு
பெருமைக்கேடு

ஈடன்

பெருமையுடையவன்
ஆற்றலுடையவன்

ஈடாதண்டம்

ஏர்க்கால்

ஈடுகட்டுதல்

பிணைகொடுத்தல்
பிணையாதல்
பொருளிழப்பிற்கு ஈடுகட்டுதல்

ஈடுகொடுத்தல்

எதிர் நிற்றல்
நிகராதல்
மன நிறைவு செய்வித்தல்
போட்டி போடுதல்
மனங்கவிதல்

ஈடேறுதல்

உய்யப் பெறுதல்
கடைத்தேறுதல்
வாழ்வடைதல்

ஈடேற்றுதல்

உய்வித்தல்

ஈட்சணம்

நோக்கம்
பார்வை
பார்த்தல்

ஈட்டல்

தேடுதல்
தொகுத்தல்
செய்தல்

ஈட்டுதல்

கூட்டுதல்

ஈட்டுப்பத்திரம்

அடைமான சாசனம்

ஈணவள்

ஈன்றவள்

ஈண்டுநீர்

கடல்