ஈ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈன்றாள்

தாய்

ஈனல்

பிரப்பித்தல்
தானியக் கதிர்

ஈனோர்

இவ்வுலகினர்

ஈகுதல்

கொடுத்தல்
படைத்தல்

ஈகையன்

கொடையாளன்.

ஈகையரியவிழை

மங்கலிய சூத்திரம்.

ஈக்குடி

சாவிக்கதிர்.

ஈங்கம்

சந்தன மரம்

ஈங்கனம்

இருப்பிடம்
இங்ஙனம்

ஈங்கன்

ஈங்கனம்

ஈங்கிசை

கொலை
நிந்தை
துன்பம்
வருத்தம்
வருத்துதல்
தீங்கு.

ஈசன்தார்

கொன்றை மாலை

ஈசன் தினம்

திருவாதிரை

ஈசாவாசியம்

நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.

ஈசானகோணம்

வடகீழ்த்திசை

ஈசானி

உமையவள்

ஈசிகை

சித்திரமெழுதுங் கோல்
யானை விழி

ஈசிதை

ஈசத்துவம் - எண்வகைச் சித்திகளுள் ஒன்று

ஈசுரலீலை

கடவுள் திருவிளையாடல்

ஈசுரார்ப்பணம்

கடவுளுக்குரிய தாக்குகை