ஈ - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈதல்

கொடுத்தல்
அருளல்
இடதல்
உதவல்
படிப்பித்தல்

வீடுகளில் பறந்து திரிந்து உணவுப் பொருள்கள்,குப்பைகள் போன்றவற்றை மொய்க்கும் (ஆறு கால்களை உடைய)ஒரு சிறிய கருப்பு நிறப் பூச்சியினம்
அதிசயக்குறிப்பு. எங்களுக்குத் தெரியாதபடி யிராநின்றதீ! (ஈடு, 1, 3, 9).
நான்காமுயிரெழுத்து
கொடு

ஈக்கில்

(தென்னை)ஈர்க்கு,ஈர்க்குக்குச்சி

ஈக்கில் கட்டு

ஈர்க்குக்குச்சியால் ஆன நீண்ட கைபிடி உள்ள துடைப்பம்

ஈகை

(மனம் உவந்து கொடுக்கப் படும் ) பொருள் உதவி
கொடை
கொடை
பொன்
கற்பகமரம்
காடை என்ற பறவை
இண்டங்கொடி

ஈகைப் பெருநாள்

ரம்சான் பண்டிகை

ஈச்சை

1.பழுப்பு நிறமும் இனிப்புச் சுவையும் உடைய கொத்துக்கொத்தான சிறு பழங்களைத் தரும் முள் போன்று கூரிய நுனியுடைய ஓலைகளைக் கொண்ட தென்னையை ஒத்த சிறிய மரம் 2.மேற்குறிப்பிட்டது போன்ற பழங்களைத் தரும் முள் போன்று கூரிய இலைகளைக் கொண்ட குத்துச்செடி

ஈசல்

இறக்கை முளைத்த கறையான்
ஈயல்

ஈசன்

(பொதுவாக)இறைவன். சிவன்
அரசன்
தலைவன்
பச்சைக் கர்ப்பூரம்

ஈசான மூலை

ஈசானிய மூலை, வடகிழக்குப் பக்கம்

ஈசுவரன்

சிவன்,ஈசன்

ஈசுவரி

பார்வதி

ஈட்டி

கழியின் நுனியில் கூர்மையான முக்கோண வடிவ இரும்பு முனை செருகப் பட்ட எறியும் ஆயுதம்
(விளையாட்டுப் போட்டியில்)எறிவதற்குப் பயன்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட வடிவில் ஆன சாதனம்
கூரிய முனையுடைய கோல்
குந்தம்

ஈட்டி எறிதல்

ஈட்டியை எறியும் விளையாட்டுப் போட்டி

ஈட்டிக்காரன்

(பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்து கந்து வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு)அசலையும் வட்டியையும் குறித்த காலத்தில் கறாராக வசூல் செய்பவன்

ஈட்டிய விடுப்பு

நிரந்தரப் பணியாளர்கள் குறிப்பிட்ட வேலை நாட்களுக்கு ஒரு நாள் விடுப்பு என்ற விகிதத்தில் சேர்த்து வைக்கும் விடுமுறை

ஈட்டிய விடுமுறை

அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் பணிபுரிந்தால் அதற்குப் பதிலாக எடுத்துக் கொள்ளும் வேறொரு விடுமுறை நாள்

ஈட்டு

(பொருள்)சம்பாதித்தல்
(வெற்றி, அனுபவம்,புகழ் முதலியவற்றை) பெறுதல்

ஈட்டுத் தொகை

(அரசுப் பணியில் உள்ள மருத்துவர் வழக்கறிஞர் போன்றோர் அரசுப் பணி தவிரத் தனியாக பணி செய்ய அனுமதி இல்லாததால்) வருமான இழப்பை ஈடு செய்யும் நோக்கத்தோடு சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் படி

ஈட்டுப் படி

(பெரிய நகரங்களில் பணி புரியும் அரசுப் பணியாளர் முதலியோஉக்கு)வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் தொகை