இ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இலாமிச்சை

வாசம்

இலேககன்

எழுதுவோன்
ஓவியன்
படைப்பாளி

இழுமெனல்

இனிய ஓசையைக் குறிக்கும் சொல்
பறையோசையைக் குறிக்கும் சொல்
வழு வழுப்பு

இளவேனின்

இளவேனில் பருவம்

இளையார்

சிறியவர்

இறும்பு

சிறு மரங்கள் மிடைந்த காடு

இலாக்கா

இலாகா

இரசிதம்

இரசதம்

இலத்தீன்

இலத்தீனிய மொழி
இலத்தீனிய மொழியை விட பழமையானது தமிழ் என்று ஆய்வுகள் கூறுகின்றன
உலகின் தொன்மொழிகளுள் இலத்தீனும் ஒன்றாகும்

இலக்கணக் குறியீடு

இலக்கணம் தொடர்புடைய சொற்கள்
குறியீடுகள்

இராச்சியம்

நாடு

இஞ்ச

(யாழ்ப்பாண வழக்கு)இங்கே

இனியவன்

இனிமையானவன்; பிறருடன் பழகுவதிலும் கவர்வதிலும் சிறந்தவன்

இசைக் கருவி

தோற் கருவி
துளைக் கருவி
நரம்புக் கருவி
கஞ்சக் கருவி
கண்டக் கருவி

இராசிக் குரிய செயல்

ஓரை
சுடர்ச் செலவு
திரேக்காணம்
நவாமிசம்
துவாதசாமிசம்
கோட்கூறு

இருடிகள்

அகத்தியன்,புலத்தியன்,அங்கிரசு,கெளதமன்,வசிட்டன்,காசிபன்,மார்க்கண்டன்(7)
அத்திரி,பிருகு,குச்சன்,வசிட்டன்,கெளதமன்,காசிபன்,அங்கிரசு(7)
மரீசி,அத்திரி,அங்கிரசு,புலஸ்தியன்,புலகன்,கிரது,வசிட்டன்(7)
அத்திரி,வசிட்டர்,புலஸ்தியர்,கிருது,பரத்வாசர்,விஸ்வாமித்திரர்,பிரதேசன்,ருசிகர்,அகத்தியர்,ததீசி, துர்வாசர்(11)

இருதுக்கள்

வசந்தருது - சித்திரை, வைகாசி
கிரீஷ்மருது - ஆனி, ஆடி
வ்ருஷருது - ஆவணி, புரட்டாதி
சரத்ருது - ஐப்பசி, கார்த்திகை
ஹேமந்த ருது - மார்கழி,தை
சசிருது - மாசி, பங்குனி

இழிச் சொல்

குறளை
பொய்
கடுஞ் சொல்
பயனில் சொல்

இறைவன் குணங்கள்

தன்வயத்தனாதல்
தூய உடம்பினனாதல்
இயற்கை உணர்வினனாதல்
முற்றும் உணர்தல்
இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்
பேரருளுடைமை
முடிவில்லாத ஆற்றல் உடைமை
வரம்பில்லாத இன்பம் உடைமை

இளம் பஞ்ச பாண்டவர்

பிரிதிவிந்தன்
சுருதசோமன்
சுருத கீர்த்தி
சதாநீகன்
சுருத சேனன்