இ - வரிசை 93 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இருளன்

ஒரு கிராம தெய்வம்

இரேகை

(ரேகா) கோடு
வரி
கைகால் முதலியவற்றிலுள்ள வரை
மதி கலை
எழுத்து

இல்லக்கிழத்தி

மனைவி

இல்லான்

வறியவன்

இலக்கினம்

சுப கரியம் செய்யக் குறிக்கப்படும் நேரம் (சுபமுகூர்த்தம்)

இலக்குமி

செல்வம்
செழிப்பு

இலகிமா

(அட்டசித்திகளின் ஒன்றான) பளுவின்மையாதல்

இலங்கணம்

பட்டினியிருத்தல்

இலங்கை

ஈழ நாடு

இலச்சினை

முத்திரை
முத்திரை மோதிரம்

இலச்சை

நாணம்
வெட்கம்

இலஞ்சி

குளம்
ஏரி
மதில்
குணம்
இயல்பு
கொப்பூழ்
சாரைப் பாம்பு

இலம்

வறுமை

இலம்பகம்

மாதர் நெற்றியிலணியும் ஓர் ஆபரணம்
பூமாலை
ஒரு காப்பிய நூலின் உட்பிரிவு

இலவந்திகை

எந்திரத்தினால் நீரை நிரப்பவும் வெளியேற்றவும் ஏற்பட்டுள்ள ஒரு குளம்
எந்திர வாவி
வாவி சூழ் சோலை

இலாகா

அரசாங்கப் பிரிவு

இலேகன்

எழுதுவோன்
சித்திரம் வரைவோன்
ஓவியன்

இலேசம்

அற்பம். என்னிடம் இலேசமுமில்லை.
See இலேசவணி, (தண்டி. 64.)
அதி சீக்கிரம். (சூடா.)
நுட்பம்

இலேசு

அற்பம்
நொய்மை

இலையமுது

வெற்றிலை