இ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இலஞ்சி

குளம்
ஏரி
மதில்
குணம்
இயல்பு
கொப்பூழ்
சாரைப் பாம்பு

இலம்

வறுமை

இலம்பகம்

மாதர் நெற்றியிலணியும் ஓர் ஆபரணம்
பூமாலை
ஒரு காப்பிய நூலின் உட்பிரிவு

இலவந்திகை

எந்திரத்தினால் நீரை நிரப்பவும் வெளியேற்றவும் ஏற்பட்டுள்ள ஒரு குளம்
எந்திர வாவி
வாவி சூழ் சோலை

இலாகா

அரசாங்கப் பிரிவு

இலேகன்

எழுதுவோன்
சித்திரம் வரைவோன்
ஓவியன்

இலேசம்

அற்பம். என்னிடம் இலேசமுமில்லை.
See இலேசவணி, (தண்டி. 64.)
அதி சீக்கிரம். (சூடா.)
நுட்பம்

இலேசு

அற்பம்
நொய்மை

இலையமுது

வெற்றிலை

இம்பர்

இவ்வுலகம். உம்பரு மிம்பரு முய்ய (திருவாச.
17)
இவ்விடத்து. இம்பரிவ் வுலக மொப்பாய்க்கு (சீவக.1737)
பின். நெட்டெழுத்திம்பர் (தொல்.எழுத்.41)

இராசிலம்

சாரைபாம்பு. (சூடா.)

இரந்திரம்

துவாரம்

இலிர்

தளிர்

இமப்பிரபை

ஓர் நரகம்

இகளை

வெண்ணெய்

இடும்பன்

இடும்புக்காரன்
(fem. (இடும்பி)

இடலை

சைதூண்

இடவயின்

இடத்து. ஒல்லா ரிடவயின் (தொல்.பொ.76)

இகா

முன்னிலையசை. (கலித்.105
உரை.)

இசைநிறை

செய்யுளில் இசைநிறைத்தற்கு வருஞ் சொல் (நன்.395.)