இ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இயல்பு புணர்ச்சி

(இலக்கணம்) சொற்கள் விகாரமில்லாமல் புணர்தல்

இயல்புளி

விதி முறைப்படி

இயவு

வழி
செல்லுதல்
காடு

இயவுள்

கடவுள்
இறைவன்
தலைமை
புகழ் பெற்றவன்
வழி

இயற்சொல்

எளிதில் பொருள் விளங்கும் சொல் (எதிர்மொழி - திரிசொல்)

இயற்றமிழ்

முத்தமிழுள் ஒன்றான செய்யுள் அல்லது உரைநடை இலக்கியத் தமிழ்

இயன் மொழி

தலைவனைப் புகழ்ந்து கூறும் புறத் துறை

இரசதம்

வெள்ளி

இரசம்

சாறு
சுவை
இலக்கியச் சுவை
பாதரசம்
இனிமை

இரட்டல்

இரட்டித்தல்
ஒலித்தல்
கர்ச்சித்தல்

இரட்டு

இரண்டாகு
ஒலி செய்
மாறியொலி செய்
முன்னும் பின்னும் அசைதல் செய்
[இரட்டுதல்]

இரட்டுறு

இரு பொருள் படு
ஐயுறு
மாறுபடு
[இரட்டுறுதல், இரட்டுதல்]

இரண வைத்தியம்

கத்தியால் அறுத்துச் செய்யும் வைத்திய சிகிச்சை
சத்திர சிகிச்சை - இரண வைத்தியன்

இரத்தப்பிரியன்

கொலை விருப்பமுடையவன்

இரத்த மண்டலி

சிவப்புப் புள்ளிகளுள்ள ஒரு விஷப்பாம்பு

இரத்தின கம்பளம்

வர்ணச் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கம்பளம்

இரதம்

தேர்
பல்
புணர்ச்சி

இரதி

மன்மதன் மனைவி
விருப்பம்
புணர்ச்சி

இரப்பு

பிச்சையெடுத்தல் - இரப்பாளன்

இரலை

ஒருவகை மான்
ஒரு வகை ஊதுகொம்பு