இ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இத்துணை

இவ்வளவு
சிறிதளவு

இதரன்

அன்னியன்

இந்தனம்

விறகு

இந்திரகோபம்

(மழைக்குக் பிறகு வெளி வரும்) தம்பலப் பூச்சி

இந்திரசாலம்

மாயவித்தை

இந்திரவில்

வானவில்

இந்திராணி

இந்திரன் தேவி

இப்பர்

வணிகரில் ஒரு வகையார்
பசுக்களைப் பாதுகாக்கும் வைசியர் (கோவைசியர்)

இப்பால்

இவ்விடம்
பிறகு

இமம்

பனி
இமயமலை
மந்தரமலை
மேருமலை
பொன்

இமாம்

தொழுகையை நடத்தும் தலைவர்

இமிசி

துபுறுத்து
தொந்தரை செய் [இமிசித்தல்]

இமிர்

ஒலி செய்
ஊது
[இமிர்தல்]

இமில்

எருதின் திமில்

இமிழ்

ஒலி
இம்மெனும் ஓசை
கயிறு
பந்தம்

இமைப்பு

கண்ணிமைப் பொழுது
பிரகாசம்

இமையார்

(கண்ணிமைத்தல் செய்யாத) தேவர்

இயக்கன்

இயக்கரில் ஒருவன்
இயக்கர் தலைவனான குபேரன் (பெண்பால் - இயக்கி)

இயமன்

யமன்

இயமானன்

யாகத் தலைவன்
ஆன்மா