இ - வரிசை 87 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இரண்டுக்குப் போதல்

மலம் கழித்தல்.

இழுக்காதே

ஒருவனை இனிமையாகப் பேசித் தீய வழியில் செல்லவைக்காதே.

இலம்போதரர்

பிள்ளையார்

இருவாய்க்குருவி

இருவாய்ச்சி

இடிச்செவி

வராககர்ணி

இரகசியமாக

மறைவாக

இடபம்

எருது
இடப ராசி
வைகாசி மாதம்
நந்தி: இரண்டாம் இராசி
ஏழு சுரங்களுள் ஒன்று: செவித்துளை: ஒரு பூண்டு: அரசர் சினத்துள் ஒன்று: மதயானை

இவரி

எதிர்

இலவங்கபத்திரி

புண்ணை இலை
தாளிசபத்திரி

இலவு மரம்

இலவம்
இலவு

இக்கு

கரும்பு
சாராயபானம்
இடை
கரும்பு
இடுக்கி
கள்
தேன்
சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு

இக

முன்னிலையசைச்சொல். (தொல்.சொல்.276.)
தாண்டிச் செல்
கடந்து செல்
பிரிந்து செல்
நீங்கு
போ [இகத்தல்]

இகபரம்

இம்மையும் மறுமையும்

இகல்

பகை
விரோதம்
போர்
வலிமை
சிக்கல்
புலவி
அளவு

இகுளை

தோழி
சுற்றம்
நட்பு
உறவு

இங்கே

இங்கு
இவ்விடத்தில்

இங்ஙன்

இங்கு
இவ்வாறு

இங்ஙனம்

இங்கு
இவ்வாறு

இச்சாசத்தி

(சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி
விருப்பாற்றல்

இச்சாசக்தி

இச்சாசத்தி