இ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இக

முன்னிலையசைச்சொல். (தொல்.சொல்.276.)
தாண்டிச் செல்
கடந்து செல்
பிரிந்து செல்
நீங்கு
போ [இகத்தல்]

இகபரம்

இம்மையும் மறுமையும்

இகல்

பகை
விரோதம்
போர்
வலிமை
சிக்கல்
புலவி
அளவு

இகுளை

தோழி
சுற்றம்
நட்பு
உறவு

இங்கே

இங்கு
இவ்விடத்தில்

இங்ஙன்

இங்கு
இவ்வாறு

இங்ஙனம்

இங்கு
இவ்வாறு

இச்சாசத்தி

(சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி
விருப்பாற்றல்

இச்சாசக்தி

இச்சாசத்தி

இசி

ஒடித்தல்
உரித்தல்
சிரிப்பு
உரிக்கை: ஒடிக்கை

இசிப்பு

இழுத்தல்
நரம்பு
வலிப்பு
சிரிப்பு
இழுப்பு

இசின்

இறந்த காலவிடை நிலை. (நன்.145, விருத்)
அசைநிலை. காதனன்மாநீமற்றிசினே (தொல்.சொல்.298, உரை)
Tense (part.) of verbs, showing the past, as in என்றிசினோர்
செய்யுளில் வரும் ஓர் அசை நிலை
ஓர் இறந்தகால இடைநிலை
ஓர் அசைச் சொல்

இசும்பு

ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி
செங்குத்துச் சரிவு

இசைகேடு

ஸ்வரத்தில் பிழை
அபகீர்த்தி
சீர்கேடான நிலை
இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்

இசைத் தமிழ்

(முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு

இட்டதேவதை

(இஷ்ட தேவதா) வழிபடு கடவுள்

இட்டலி

அரிசி மாவு
உளுந்து மாவு கலவையால் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை

இட்டிது

சிறிது
ஒடுங்கியது
சமீபம்
அண்மை

இட

பிள
தோண்டு
உரித்தல் செய்
பிளவுபடு
குத்த்யெடு [இடத்தல்]

இடக்கர்

அவையில் சொல்லத் தகாத சொல்
நீர்க்குடம்
தாறுமாறு செய்பவர்