இ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இளமுருகு

இளைய முருகன்
இளமையானவன்
அழகானவன்

இறைகுமாரன்

இறைவனின் குமாரன்
குமரன் என்னும் இறைவன்

இனியன்

இனியவன்

இன்பசெல்வம்

எல்லையில்லா இன்பத்தை அளிக்கும் செல்வப்பேறு

இன்பசெல்வன்

எல்லையில்லா இன்பத்தை அளிக்கும் செல்வப்பேற்றை பெற்றவன்

இஷ்டம்

விருப்பம்

இடம் போடுதல்

பேருந்து வண்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது தனக்கென்று ஒரு இடத்தைத் துண்டு போட்டு கைப்பற்றுதல்.

இத்யாதி

இதைப் போன்று இன்னும் பிற.

இரட்டைக் கிளவி

இணையாக வருவதும் பிரித்தால் பொருள் தராததுமான சொல். எடுத்துக்காட்டு : கலகல : தொள தொள : கமகம : படபட.
இரட்டையாக நின்றால் மட்டும் பொருள் தரும் சொல் (எ.கா - சலசலவென)

இரண்டுக்குப் போதல்

மலம் கழித்தல்.

இழுக்காதே

ஒருவனை இனிமையாகப் பேசித் தீய வழியில் செல்லவைக்காதே.

இலம்போதரர்

பிள்ளையார்

இருவாய்க்குருவி

இருவாய்ச்சி

இடிச்செவி

வராககர்ணி

இரகசியமாக

மறைவாக

இடபம்

எருது
இடப ராசி
வைகாசி மாதம்
நந்தி: இரண்டாம் இராசி
ஏழு சுரங்களுள் ஒன்று: செவித்துளை: ஒரு பூண்டு: அரசர் சினத்துள் ஒன்று: மதயானை

இவரி

எதிர்

இலவங்கபத்திரி

புண்ணை இலை
தாளிசபத்திரி

இலவு மரம்

இலவம்
இலவு

இக்கு

கரும்பு
சாராயபானம்
இடை
கரும்பு
இடுக்கி
கள்
தேன்
சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு