இ - வரிசை 83 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இளையவர்

பெண்கள்.

இளையவன்

இளையோன்.

இளைவலி

கரிக்காடு.

இறகடிமுள்

முருந்து.

இறக்குதுறை

இறங்குதுறை.

இறங்கண்டம்

ஒருவகை அண்டநோய்.

இறங்குபொழுது

சாயங்காலம்.

இறங்குமட்டான்

இறங்கமாட்டான்.

இறஞ்சி

அவுரி.

இறந்தகாலவிடைநிலை

கழிந்த காலத்தைக்காட்டும் இடைச்சொற்கள்.

இறந்திரி

இத்தி.

இறந்துபடுதல்

சாதல்.

இறந்தோர்சேர்வனம்

மசானம்.

இறாட்டாணியம்

இடுக்கண்.

இறாத்துக்கட்டுதல்

கட்டித்தூக்குதல்.

இறுகக்கட்டல்

அழுந்தக்கட்டல்.

இறுகத்தழுவல்

இறுகவணைத்தல்.

இறுகினகை

ஈயாதகை.

இறுதிக்காலம்

முடிவுக்காலம்.

இறுநாகம்

இலாமிச்சை.