இ - வரிசை 79 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இல்வாழ்பேய்

துஷ்டமனைவி.

இல்வாழ்வான்

இல்லாச் சிரமத்தோன்.

இல்வாழ்வு

இல்வாழ்க்கை.

இவணம்

இங்கே.

இவநட்டம்

மிளகு.

இவரும்

உலாவும்.

இவறன்மை

அசட்டை, ஆசை, உலோபக்குணம்.

இழப்புணி

இழந்தவர்.

இழவுகாரன்

சாவுக்குரியவன்.

இழருவிழுதல்

சாதல்.

இழவுவினாவல்

இழவுகொண்டாடல்.

இழவுவீடு

சாவீடு.

இழவோலை

சாவோலை.

இழிகடை

அறக்கீழானது.

இழிகட்பேருங் கண்ணணார்

ஒருபுலவர், இவர் கடைச்சங்கத்திருந்தவர்.

இழிகண்

இழியற்கண்.

இழிகுலம்

தாழ்ந்தகுலம்.

இழிங்கு

ஈனம், வடு.

இழிச்சொல்

பழிச்சொல்.

இழிஞர்

சண்டாளர்.