ஆ - வரிசை 61 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆட்டி

பெண்
மனைவி

ஆய்கம்

அழகு(ஆய்கொல் மயிலோ)

ஆனைக்கொன்றான்

து யானையையே கொன்று விடும் அளவுக்கு பெரிதாக இருக்கும் ஓர் பாம்பு

ஆகிடிச்சு

ஆகிவிட்டது

ஆயிடிச்சு

ஆகிவிட்டது

ஆயோதம்

யுத்தம்

ஆட்டமாய்

போல குதிரையாட்டமாய் ஓடினான்

ஆட்டைவட்டம்

வருஷந் தோறும்

ஆட்டைவட்டன்

ஆட்டைவட்டம்

ஆடைக்குங்கோடைக்கும்

எல்லாப்பருவத்தும்; ஆடைக்குங் கோடைக்கும் வற்றாத ஏரி.

ஆதியோடந்தம்

முதலிலிருந்து முடிவுவரை.

ஆபாதசூடம்

பாதமுதல் முடிவரை

ஆனமட்டும்

கூடியவரை

ஆடவர்

இளையோர்

ஆராவமுது

ஆராவமுதம்

ஆமலகி

ஆமலகம்

ஆதவம்

ஆதபம்

ஆநந்தமூலம்

கஞ்சா

ஆடல்கள்

அல்லியம்
கொட்டி
குடை
குடம்
பாண்டரங்கம்
மல்
துடி
கடையம்
பேடு
மரக்கால்
பாவை

ஆடவர் பருவம்

பாலன் 1-7 வயது
மீளி 8-10 வயது
மறவோன் 11-14 வயது
திறவோன் 15 வயது
காளை 16 வயது
விடலை 17 -30 வயது
முதுமகன், 30 வயதுக்கு மேல்