ஆ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆர்ப்பரித்தல்

ஆரவாரித்தல். மறைகளார்ப்பரிப்பும் (மச்சபு. திரிபுரநிருமாணவ. 14).

ஆலாப்பறத்தல்

திண்டாடுதல்

ஆறப் போடுதல்

ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்தி செய்தல்

ஆனைச்சாத்தன்

கரிக்குருவி

ஆதித்தன்

ஆதித்தியன்

ஆட்டி

பெண்
மனைவி

ஆய்கம்

அழகு(ஆய்கொல் மயிலோ)

ஆனைக்கொன்றான்

து யானையையே கொன்று விடும் அளவுக்கு பெரிதாக இருக்கும் ஓர் பாம்பு

ஆகிடிச்சு

ஆகிவிட்டது

ஆயிடிச்சு

ஆகிவிட்டது

ஆயோதம்

யுத்தம்

ஆட்டமாய்

போல குதிரையாட்டமாய் ஓடினான்

ஆட்டைவட்டம்

வருஷந் தோறும்

ஆட்டைவட்டன்

ஆட்டைவட்டம்

ஆடைக்குங்கோடைக்கும்

எல்லாப்பருவத்தும்; ஆடைக்குங் கோடைக்கும் வற்றாத ஏரி.

ஆதியோடந்தம்

முதலிலிருந்து முடிவுவரை.

ஆபாதசூடம்

பாதமுதல் முடிவரை

ஆனமட்டும்

கூடியவரை

ஆடவர்

இளையோர்

ஆராவமுது

ஆராவமுதம்