ஆ - வரிசை 59 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆராமை

தெவிட்டாமை
திருப்தியாகாமை

ஆராவமுதம்

தெவிட்டாத அமிர்தம்

ஆரியக்கூத்து

கழைக்கூத்து

ஆரியன்

ஆரிய இனத்தவன்
மதித்தற்கு உரியவன்
ஆசிரியன்
புலவன்
ஐயனார் தெய்வம்
கழைக்கூத்தன்

ஆரியாவர்த்தம்

இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடைப்பட்ட பிரதேசம்

ஆருகதம்

சமண மதம்
நாவல்மரம்

ஆருகதன்

சமணன்

ஆரூடம்

ஏறிய நிலையிலுள்ளது
நினைத்த காரியம் சொல்லும் சோதிடம்

ஆரூடன்

சீவன்முத்தன்
வாகனம் முதலியவற்றில் ஏறியுள்ளவன்

ஆலகாலம்

பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றிய நஞ்சு

ஆலங்கட்டி

கல் மழை(பனிக்கட்டி மழை)

ஆலசியம்

சோம்பல்
மடிமை
தாமதம்

ஆலத்தி

மஞ்சள் நீர் அல்லது விளக்கு போன்ற பொருளைச் (மணமக்கள் முன் அல்லது விக்கிரகத்துக்கு முன்) சுற்றுதல்

ஆலல்

மயிலின் குரல்
ஒலி
கூவுதல்

ஆலாபி

ஓர் இராகத்தை விஸ்தாரமாகப் பாடு
ஆலாபித்தல், ஆலாபனம், ஆலாபனை

ஆலாலம்

(ஆலகாலம்) பாற்கடலைக் கடைந்தபொழுது பிறந்த நஞ்சு
வீட்டு வெளவால்

ஆலி

மழை
மழைத்துளி
காற்று
ஆலங்கட்டி
கள்
கோயில்
விழாக்களில் சுவாமி வீதிவலம் வரும் பொழுது எடுத்துச் செல்லப்படும் பூத உருவம்

ஆவணக்களம்

பத்திரம் பதிவு செய்யுமிடம்

ஆசுகம்

ஆசுகி

ஆக்கெளுத்தி

கெளிற்று மீன்வகை
கடற்கெளிற்றுவகை.