ஆ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆமந்திரிகை

ஒருவகைப் பறை

ஆமலகம்

நெல்லி மரம்

ஆமாத்தியன்

மந்திரி

ஆய்ப்பாடி

இடையர் சேரி

ஆயக்காரன்

சுங்கம் வாங்குபவன்

ஆயக்கால்

பவனி வரும் பொழுது பல்லக்கைத் தாங்கும் முட்டுக்கால்

ஆயத்தார்

ஒரு பெருமாட்டியின் தோழியர்

ஆயர்பாடி

இடையர் சேரி

ஆயன்

இடையன்
(பெண்பால் - ஆய்ச்சி, ஆய்த்தி)

ஆயாள்

தாய்
தாதி

ஆயுள்வேதம்

(ஹிந்து வைத்திய சாத்திரம்)
மருத்துவக் கலை
அருள்மறை

ஆர்

ஆத்திமரம்
சக்கரத்தின் ஆரக்கால்
அச்சுமரம்
அழகு
நிறைவு
கூர்மை
மலரின் புல்லிவட்டம்
(உயர்திணை)பலர் பால் படர்க்கை விகுதி
(எ.கா - சென்றார்)
மரியாதைப் பன்மை விகுதி (எ.கா - தந்தையார், ஒளவையார்)

ஆர்கலி

கடல்
வெள்ளம்
மழை

ஆர்வம்

ஒரு பொருளைப் பெற விரும்பு
ஒருவகை நரகம்
அன்பு

ஆர்வலம்

அன்புகொண்டவன்
பரிசிலன்
கணவன்

ஆர்வலித்தல்

அன்பு மிகுதல்

ஆர

நிறைய
மிக
ஓர் உவம உருபு

ஆரஞ்சு

கிச்சிலி
ஒரு வகை பழம்

ஆரண்யகம்

வேதத்தின் ஒரு பகுதி

ஆரணம்

வேதம்
வேதத்தின் ஒரு பகுதியான ஆரண்யகம்