ஆ - வரிசை 56 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆடகம்

தங்கம்
நால்வகைப் பொன்களில் ஒன்று
துவரை

ஆடம்

இருபத்துநான்கு படிகொண்ட ஒரு முகத்தலளவை

ஆடலை

பூவாத மரம்

ஆடவல்லான்

தஞ்சைக் கோயிலில் உள்ள நடராசமூர்த்தி
முதலாம் ராஜராஜ சோழன் காலத்தே வழக்கத்தில் வந்த மரக்கால்
எடைக்கற்களின் பெயர்

ஆடாதோடை

ஒரு மருந்துச் செடி

ஆடிப்பட்டம்

ஆடி மாதத்தில் பயிரிடும் பருவம்

ஆடு சதை

கீழ்க்காலின் பின்புறத்தசை

ஆடுதன்

விளையாட்டுச் சீட்டுச் சாதி நான்கினுள் ஒன்று

ஆடு தீண்டாப்பாளை

ஒரு புழுக்கொல்லிப் பூண்டு

ஆண்டகை

மனிதரில் சிறந்தவன்
ஆண் தன்மை

ஆண்டலைக்கொடி

முருகனது சேவற்கொடி

ஆண்பனை

காயாத பனைமரம்

ஆண் மரம்

உள் வயிரமுள்ள மரம்
செங்கொட்டை மரம்

ஆணிக்கல்

தங்கம் நிறுக்கும் எடைக்கல்

ஆணு

நன்மை
இனிமை
அன்பு
பாதரசம்

ஆத்மஞானம்

தன்னையறிதல்

ஆதபம்

வெயில்

ஆதபன்

ஆதவன்

ஆதரம்

அன்பு
ஆசை
மதிப்பு
உபசாரம்
ஊர்

ஆதன்

குருடன்
அறிவில்லாதவன்
ஆன்மா
அருகக் கடவுள்