ஆ - வரிசை 54 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆரை

நீர்த்தாவரமான ஆரை, கோரைப்புல் போன்றதனால் பின்னப்பட்ட பாய்
ஓர் அரனின் மதில் சுவர்
அச்சு மரம்

ஆரியவர்த்தம்

ஆரியன்

ஆரிடர்

முனிவர்

ஆராதனம்

ஆராதனை

ஆகாமியம்

அக்கிரமம்
வரு பிறப்புக்களில் பலன் தரக்கூடிய இப்பிறப்பு நல்வினை தீவினைகள்

ஆவணக்களரி

ஆவணக்களம்

ஆக்கல்

படைத்தல்
சமைத்தல்

ஆக்கினை

கட்டளை
உத்தரவு
தண்டனை

ஆகம்

உடம்பு
மார்பு
மனம் அல்லது இதயம்

ஆகமனம்

வந்து சேர்தல்

ஆகரம்

இரத்தினக் கற்கள் கிடைக்கும் சுரங்கம்
உறைவிடம் கூட்டம்

ஆகாசக்கோட்டை

(உண்மையில் இல்லாத) கற்பனை

ஆகாய கமனம்

காற்றில் நடந்து செல்லும் வித்தை

ஆகாசத்தாமரை

கொட்டைப்பாசி
ஒருவகை நீர்த்தாவரம்
'ஆகாயத்தில் தாமரை' என்பது போல் இல்லாத பொருள்

ஆகாயம்

ஐம்பூதங்களில் ஒன்றான 'வெளி' வானம்; வாயுமண்டலம்

ஆகாதவன்

பகைவன்
பயற்றவன்

ஆகு

எலி
பெருச்சாளி

ஆகுலம்

மனக் கலக்கம்
துன்பம்
ஆரவாரம்
பகட்டு

ஆங்காலம்

நல்ல காலம்
எடுத்த காரியமெல்லாம் வெற்றியடையும் காலம்

ஆசாபங்கம்

விரும்பியது பெறாத ஏமாற்றம்