ஆ - வரிசை 53 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆழியான்

திருமால்

ஆறுசூடி

சிவன்

ஆறுமுகன்

முருகன்

ஆனந்தன்

சிவன், அருகன்

ஆனன்

சிவன்

ஆனை முகன்

மூத்தபிள்ளையார்

ஆக்கிரோஷம்

வெறி : ஆவேசம்.

ஆட்டம் கொடுத்தல்

நிலை தளர்தல்.

ஆப்பு வைத்தல்

கோள் சொல்லுதல்.

ஆர்ஜிதம்

ஒருவர் நிலத்தை அரசு தன்வயம் எடுத்துக் கொண்டு பொது நலனுக்கு ஆக்குதல்.

ஆவன செய்தல்

தேவையானதைச் செய்தல்.

ஆழம் பார்த்தல்

ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல்

ஆளாக்குதல்

ஒருவனின் வாழ்க்கையில் வளம் காணச் செய்து முன்னேற்றுதல்.

ஆறப்போடுதல்

பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாது தள்ளிப்போடுதல்.

ஆனானப்பட்டவர்

திறமும் செல்வமும் மிக்கவர்.

ஆஷாட பூதி

வெளித் தோற்றத்திற்குப் பொருத்த மில்லாது செயல் புரிபவர்.

ஆஞ்ஞாசக்கரம்

அரசனது ஆணையாகிய சக்கரம்

ஆதோரணமஞ்சரி

எதிர்த்த மதயானைகளை அழித்தும் அடக்கியும்போடும் வீரனது சிறப்பை வஞ்சிப்பாவாற் றெடுத்துப்பாடும் பிரபந்தம். (தொன். வி. 283, உரை.)

ஆம்பல்

தாமரை
அல்லிக்கொடி
மூங்கில்
ஓர் இசைக்குழல்
ஊதுகொம்பு
யானை
சந்திரன்
கள்
அடைவு
முறைமை
நெல்லிமரம்
பேரொலி
ஒரு பேரெண்

ஆலம்

நஞ்சு
நீர்
கடல்
மழை
ஆலமரம்
ஆகாயம்
விடம்
கருமை
கலப்பை