அ - வரிசை 232 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அச்சுதம்

கெடுதலின்மை
அழியாமையுள்ளோன்
அச்சுதன்முன்னர்வந்தோன், பலபத்திரன் அச்சுதாநந்தகோவிந்தனே

அச்சுரம்

முருங்கை

அஞர்

அறிவில்லார்
துன்பம்
ஆரஞர்

அஞலம்

அஞல்
கொசுகு

அஞ்சம்

அன்னம்
அம்சம்
அஞ்சபாதம்
ஓர் புள்ளடி

அஞ்சனை

வடதிசையானைக்குப்பெண் யானை
அனுமான்றாய், also called அஞ்சனாதேவி

அஞ்சிதம்

உண்டாயிருக்கை
பொருந்துகை
வணக்கம்
அஞ்சிதமுகம்
தலைசாய்ந்திருதோண்மேல் விழுகை

அஞ்சுமான்

பன்னிரண்டு சூரியரிலொருவன்
சிவாகமமிருப்பத்தெட்டிலொன்று
Grandson of சகரன், சகரன்பௌத்திரன்

அஞ்சுவனத்தார்

நெய்வாரினோர்பேதம்

அஞ்ஞன்

அறிவிலான்

அடதாளம்

தாளம்

அடப்பனார்

அடப்பன்
நெய்தற்றலைவன் பட்டப்பெயர்

அடப்பனார்

சமுதாயத்தில் கெளரவமான அந்தஸ்தில் இருப்பவர்

அடம்பாரம்

முழுதும்

அடம்பு

ஆட்டுக்காலடம்பு, and மான்குளம்படம்பு
ஓர்கொடி. அடம்பங்கொடி-அடப்பங்கொடி

அடலை

சாம்பல்
போர்க்களம்
அடலைமுடலை

அடாசு

மட்கிச்செத்தது

அடாவந்தி

அநியாயம்
துன்பம்
இட்டேற்றம்

அடுக்கலிட

நெல்லையிரண்டாம் முறைகுற்ற.

அடுக்கல்

குவித்தல்
மலை