அ - வரிசை 223 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அகத்தீடு

கையால் உள்ளணைக்கை
உள்ளீடு
உள்ளிடுதல்
கழுவுதல்
நிறைவு
அன்பு
எண்ணம்

அகத்து

நடுவண்

அகத்துழிஞை

கோட்டையிலுள்ளாரைப் புறத்தார் போர் வெல்லும் புறந்துறை

அகத்தொண்டர்

வீட்டுப் பணியாளர்

அகத்தோர்

உள்ளிருப்போர்
ஊரார்
மனமொத்த நண்பர்

அகநாடக உரு

அகக்கூத்தின் வண்ணம்
அவை கந்தமுதல் பிரபந்தம் ஈறாக இருபத்தெட்டாகும்

அகநாழிகை

கருப்பக்கிருகம்

அகநிலைப்பசாகம்

சுட்டுவிரல் நுனியில் அகப்பட்ட மற்ற மூன்றும் பொலிந்து நிற்பது

அகப்படுதல்

உட்படுதல்
பிடிக்கப்படுதல்
சிக்கிக் கொள்ளுதல்

அகப்படை

அந்தரங்கப் பரிகரம்

அகப்பணி

மனத்தொழில்
வீட்டு வேலை

அகப்பரிவாரம்

வீட்டு வேலைகாரர்கள்

அகப்பாடு

உண்ணிகழ்ச்சி
அகப்படுதல்
நெருங்கியிருக்கை

அகப்பாட்டாண்மையன்

மனமொத்த நண்பன்
மிக நெருங்கியவன்
பிடிபடுந் தொலைவில் உள்ளவன்

அகப்பாட்டு

அகநானூறு

அகப்பாட்டு வண்ணம்

இறுதியடி ஏகாரத்தான் முடியாது இடையடி போன்று வரும் சந்தம்

அகப்புறக்கைக்கிளை

காமஞ் சாலா இளமையோள் வயிற் குறுகியொருவன் அவள் குறிப்பு அறியாது மேன்மேலும் கூறுவது

அகப்புறச்சமயம்

பாசுபதம்
மாவிரதம்
காபாலம்
வாமம்
வைரவம்
அயிக்கியவாத சைவம் - 6

அகப்புறத்திணை

அகத்திணைக்குப் புறம்பான கைக்கிளை;பெருந்திணை முதலியன

அகப்புறமுழவு

எழுவகை முழவுகளுள் ஒன்று
அது தண்ணுமை, தக்கை முதலாகப் பலவகைப்படும்