அ - வரிசை 222 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அலைமருவி

ஒத்திசை
தொடரிசை

அசைவூட்டம்

சலனப்படம்

அஃகுப்பெயர்

நீண்ட பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர்ச் சுருக்கம்

அன்மை

அற்றுப்போதல்
இல்லாமற்போதல்

அந்தணன்

சான்றோன்
பிராமணன்
அந்தணன் = "அம்" + "தண்" + "அனன்"
அழகும் குளிர்ச்சியையும் கொண்டவன்

அசுணம்

இசையறியும் பறவை

அளகம்

முன்னுச்சி முடி
கூந்தலுக்கான அழகிய சொல். ஓதி, குழல் ,கேசம், சடை எனவும் கூறலாம். சடையுடன் இருப்பதால் இறைவன் சடகோபன் எனவும் ( அளகம்+ஈசன்) அளகேசன் எனவும் அழைக்கப்படுவதைக் காண்க

அற்றம்

அச்சம்
அழிவு
அவமானம்
குற்றம்
கேடு
சோர்வு
துன்பம்

அம்புலிமாமா

நிலா
மதி( வானில் காணப்படும்)

அதிஸ்டம்

நல்வாய்ப்பு
நல்லூழ்

அகதங்காரன்

மருத்துவன்

அகதம்

குளிகை
சுகம்
அழிவற்றது

அகதன்

நோயிலி

அகத்தடிமை

அணுக்கத் தொண்டு

அகத்தடியள்

வீட்டு வேலைக்காரி

அகத்தன்

இடத்தினன்
தலைவனல்லாதவன்
எல்லாவற்றையும் மனத்தில் வைத்திருப்பவன்

அகத்தார்

உள்ளிடத்திலிருப்பவர்
இல்வாழ்வார்
உறவினர்
முற்றப்பட்டார்
நொச்சியார்

அகத்திணைப்புறம்

கைக்கிளையும் பெருந்திணையும்

அகத்தியல்

உள்ளத்தியற்கை

அகத்திருத்துவம்

செயலின்றி நிற்கும் கடவுட்டன்மை